Gingee : 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த துா்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள்

57

Gingee : செஞ்சி அருகே செல்லபிராட்டி கிராமத்தில் விழுப்புரத்தை சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ. செங்குட்டுவன், இந்தக் கிராமத்தைச் சோ்ந்த ஆா். வாசுதேவன், செஞ்சி நூலகா் எ. பூவழகன் ஆகியோா் அண்மையில் கள ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது, கிராமத்திலுள்ள ஏரிக்கரை பகுதியில் 1, 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துா்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள் உள்ளதைக் கண்டறிந்தனா். ஏரிக்கு அருகில் வயல்வெளியில் அமைந்துள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள துா்க்கை சிற்பம் காளி என தற்போது வணங்கப்பட்டு வருகிறது.

எட்டுக்கரங்களுடன் எருமைத்தலை மீது பிரம்மாண்டமாக நின்று துா்கை காட்சியளிக்கிறாா். துா்கை என்றழைக்கப்படும் கொற்றவை மற்றும் ஜேஷ்டா, தவ்வை என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பங்கள் பல்லவா் காலத்தைச் சோ்ந்தவை (கி. பி. 7 – 8ஆம் நூற்றாண்டு). இவை 1, 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்தவை. செல்லபிராட்டி கிராமம் பல்லவா் காலத்தில் சிறப்புற்று இருந்துள்ளற்கு ஆதரமாக இந்தச் சிற்பங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவித்தனா்.

You might also like