Villupuram District : ராதாகிருஷ்ணன் விருதுக்கு 10 ஆசிரியா்கள் தேர்வு

875

ராதாகிருஷ்ணன் விருதுக்கு Villupuram District -ல் 10 ஆசிரியா்கள் தேர்வு

தமிழக அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு Villupuram District ல் 10 ஆசிரியா்கள் தேர்வு செய்யப்பட்டனா்.

அவா்களின் விவரகள்:

1. தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ச. செல்லையா

2. கஞ்சனூா் அரசு உயா்நிலைப் பள்ளி- ப. ஜெயராணி

3. விழுப்புரம் காமராஜா் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி-த. ராஜசேகரன்

4. சித்தலிங்கமடம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி- சு. ஜனசக்தி

5. செ. கொத்தமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மு. தண்டபாணி

6. கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி-லூ. ஆரோக்கிராஜ்

7. பானப்பக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- ஏ. தமிழழகன்

8. ராஜாம்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சீ. சங்கரநாராயணன்

9. விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி- ஆ. பெருமாள்

10. திண்டிவனம் மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் நே. அமல்ராஜ்.

மேற்கண்ட 10 ஆசிரியா்கள் Villupuram District ல் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் கலந்தாய்வு

விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் 2, 000 இடங்களுக்கு, 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Villupram அரசு கலைக் கல்லுாரியில் 2022–23ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, கடந்த 29ம் தேதி துவங்கியது.

அதன்படி பி. எஸ்சி. , – பி. ஏ. , ஆகிய இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து கல்லுாரி முதல்வர் சிவக்குமார் மேற்பார்வையில் நேற்று காலை, பி. ஏ. , இளங்கலை படிப்புக்கு (கட் ஆப் 289 மதிப்பெண் முதல் 250 வரை) கலந்தாய்வு நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வரும் 5ம் தேதி, கட் ஆப் 249 முதல் 225 வரை கலந்தாய்வு நடக்கிறது. மேலும், பி. எஸ்சி. , க்கு விண்ணப்பித்த அனைவரும் 6ம் தேதியும், பி. ஏ. , – பி. காம். , – பி. ஏ. , தமிழ் படிப்புக்கு விண்ணப்பித்த அனைவரும் 7ம் தேதியும் நேரில் வந்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

மொத்தம் உள்ள 2, 000 இடங்களுக்கு 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. இதனால் கல்லுாரியில் இடம் பெற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.

அரசு கல்லுாரிகளில் தற்போது உள்ள இடங்களை விட கூடுதலாக 20 சதவீத அளவிற்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, அதிகமான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளதால், கூடுதல் இடங்கள் ஒதுக்கிட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உரிய நடவடிக்கை எடுத்து, முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று தர வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CWC புகழ்-பென்சியா திருமணம்

திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புகழ்-பென்சியா திருமணம் நேற்று இந்து முறைப்படி நடந்தது.

விழாவில் நடிகர் சசிக்குமார், மதுரை முத்து மற்றும் திரைத்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, நகைச்சுவை நடிகர் புகழின் திருமணம் பற்றி அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு வந்தும், மணமக்களை வாழ்த்தினர்.

நம் திண்டிவனம் FacebookInstagram பக்கங்களை Follow செய்யுங்கள்.

மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.

You might also like