Ambulance Driver Job:108 ஆம்புலன்ஸ் உதவியாளர், டிரைவர் பணி வாய்ப்பு.

236

Ambulance Driver Job:108 ஆம்புலன்ஸ் உதவியாளர், டிரைவர் பணி வாய்ப்பு.

 

விழுப்புரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 4ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 4ம் தேதி காலை 9: 00 மணி முதல் பிற்பகல் 3: 00 மணி வரை நேர்முக தேர்வு நடக்கிறது.

இதில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை மற்றும் மருத்துவம் தொடர்பான தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு, 10 நாட்கள் வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும். மாத ஊதியமாக 15 ஆயிரத்து 235 ரூபாய் வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி. எஸ்சி. , நர்சிங், செவிலியர் டிப்ளமோ படிப்பு மற்றும் பி. எஸ்சி. , அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

You might also like