Tobacco: மயிலம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை – 11 கடைகளுக்கு சீல்

195

Tobacco: விழுப்புரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகுந்தன் தலைமையிலான அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திண்டிவனம், மயிலம் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையின்போது, 11 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 11 கடைகளையும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா். மேலும் கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

You might also like