திண்டிவனத்தில் 11 விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சிறை | Tindivanam Political News

11 விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சிறை | Tindivanam Political News
Tindivanam Political News : திண்டிவனம் அருகே பாமகவினரை தாக்கிய 11 விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் எடையாளம் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பாமக சார்பில் போட்டியிட்ட காளிதாசுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க பாமகவினர் சென்றுள்ளனர்.
அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாமகவினர் தாக்கப்பட்டனர். மேலும் அவர்கள் சென்ற வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அதே பகுதியை சேர்ந்த பாமக கிளை செயலாளர் சந்திரசேகரன் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் மயிலம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் தொகுதி பொறுப்பாளர் செல்வ சீமான் உள்ளிட்ட 32 பேர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று நீதிபதி சுதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில்தமிழ் என்பவர் இறந்து விட்ட நிலையில், ஜெகதீசன், 42, என்பவருக்கு 2 ஆண்டு சிறையும், 2, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ; நவீன்ராஜ், 41; கார்த்திக், 25; மதன், 38; துளசி, 38; சுதாகர், 35; செல்வசீமான், 39; ராஜ்கமல், 27; குப்புசாமி, 57; அலெக்சாண்டர், 30; இருசன், 27; ஆகிய 10 பேருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 1, 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் 32 பேரில் 20 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
மேல்மலையனூரில் 83 வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு
மேல்மலையனூர் அருகே உள்ள செவலபுரையில் திரவுபதி அம்மன் கோவில் குளத்தை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்பட்டுள்ள 83 வீடுகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புச் செல்வன், சம்பந்தம், தாசில்தார் கோவர்த்தனன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் நேற்று செவலபுரை கிராமத்துக்கு வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கிருந்த மக்கள் திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து அந்த கிராம மக்கள் மீது தெளித்து தீவைக்க முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் உதவி ஆட்சியர் அமீத் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின்போது இவ்வாறு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூறினார்.
மேலும் இப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் நிச்சயமாக அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் அப்புறப்படுத்தப்படும் என கூறினார்.
மேலும் தகுதியான நபர்களுக்கு மாற்று இடம் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் செவலபுரை பகுதியில் பரபரப்பு நிலவியது.