திண்டிவனம்-மரக்காணம் இடையே ரூ.296 கோடியில் 4 வழிச்சாலை

திண்டிவனம்-மரக்காணம் இடையே ரூ.296 கோடிசெலவில் 4 வழிச்சாலை:
திண்டிவனம்-மரக்காணம் இடையே உள்ள இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழக அரசு ரூபாய் 296 கோடி ஒதுக்கி உள்ளது. சாலை மேம்பாட்டு திட்டத்தின் பணியை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து கருங்கல் ஜல்லி ஆகியவை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது.
கனரக வாகனங்கள் அடிக்கடி இப்பகுதியில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. மழைக்காலத்திலும் சாலையானது சேதமடைகிறது.
எனவே திண்டிவனம் மரக்காணம் இடையே உள்ள இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது.
இத்தகைய விரிவாக்க பணிக்காக சாலை சந்திப்பு பகுதி, சாலை மைய தடுப்பு சுவர், சாலையின் இரு பக்கங்களிலும் புதிய மரக்கன்றுகள், சிறு பாலம், வடிக்கால்வாய், பஸ் நிறுத்தம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பரடண்டு, மாவட்ட நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனியார் கல்லூரிகளுக்கு கலெக்டர் உத்தரவு :
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அவர்களுக்கான தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் பணி புரியும் மகளிர் விடுதி ஆகியவையும் விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் சில விடுதிகள் பதிவு செய்யப்படாமல், புதுப்பிக்காமலும் இயங்கி வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இத்தகைய விடுதிகளை முறைப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இளங்கள் சட்டம் 2014 கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன.
இந்த இரு சட்டத்தின் படியும் மேல் கூறப்பட்ட விடுதிகள் விடுதியில் நிர்வாகிகள் மூலம் உரிய இணையதளம் மூலம் சான்றுகளுடன் அவர்கள் நடத்தி வரும் விடுதிகளை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் புதுப்பிக்கப்படாமல் இருக்கின்ற விடுதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்தல் ஆனது 31 8 2022க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான விவரங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் அவ்வப்போது விடுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
அத்தகைய ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியவும் புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்ற விடுதிகளை சட்ட பிரிவு 20ன் கீழ் உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு மூடப்படும் விடுதிகளின் நிர்வாகிகள் மீது காவல்துறையின் மூலம் வழக்கு பதிவு செய்து அதிகபட்சமாக மூன்று ஆண்டு காலம் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடைசி நாள்
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தனியார் விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் தவறாமல் உரிய இணையதளத்திற்கு சென்று புதுப்பித்தல் பணியினையும் பதிவு செய்தல் பணியணையும் 31 8 2022 முடித்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விடுதியில் போதுமான பாதுகாப்பு வழங்குதல், உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு அலுவலக தரைத்தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.