Marakkanam: மரக்காணத்தில் நீரில் மூழ்கிய 3,500 ஏக்கர் உப்பளங்கள்

Marakkanam: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் உள்ள சுமார் 3,500 ஏக்கர் பரப்பிலான உப்புளங்களும் மழை நீரில் மூழ்கி, பெரிய ஏரிபோல் காட்சியளிக்கிறது. மரக்காணத்தை அடுத்துள்ள ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், காணிமேடு-மண்டகப்பட்டு இடையே உள்ள ஓங்கூர் ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் காணிமேடு, மண்டகப்பட்டு, அகரம், அசப்பூர் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.