Gingee: மருத்துவ முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை ஊராட்சியில் ஜோதி அருள் அறக்கட்டளை, தீபம் அறக்கட்டளை மற்றும் வள்ளலார் ஆன்மீக ஞானமையம் இணைந்து வழங்கும் இலவச கணினி பயிற்சி மையத்தையும், இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ பார்வையிட்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் பச்சையப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் சீனுவாசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.