Gingee : செஞ்சி அருகே 700 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

111

Gingee : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த கருங்குழி கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சுதாகர் தலைமையில், செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ்துறை மாணவர்கள் கமலேஷ், கார்த்திக் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் இரண்டு புதிய கல்வெட்டுக்கள் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இந்த கல்வெட்டுகள் ஆனது 700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த கல்வெட்டு என ஆய்வு செய்வதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You might also like