மரக்காணம் : சுயேட்சை மற்றும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பேரூராட்சியில் தேர்தலுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மரக்காணம் பேரூராட்சியில் திமுக அதிமுகவை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றனர்.
திமுக 17 வார்டுகளிலும் அதிமுக 18 வார்டுகளிலும் பாரதிய ஜனதா கட்சி 13 வார்டுகளிலும் பாமக 4 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆறு வார்டுகளிலும் சுயேய்சைகளாக 15 வார்டுகளிலும் மொத்தமாக 35 வேட்பாளர்கள் மரக்காணம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 1,2, 7வது வார்டுகளில் அதிமுக மற்றும் திமுகவை எதிர்த்து பாஜக, பாமக, அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இறங்கவில்லை.
ஆனால் இந்த மூன்று வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிமுக மற்றும் திமுகவை எதிர்த்து போட்டியிடுகின்றனர். பிரதான கட்சிகளான திமுக அதிமுகவை தோற்கடித்து மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கிய வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுயேட்சை வேட்பாளர்கள் ஓட்டு சேகரிப்பில் கடும் போட்டி போட்டு வருகின்றனர்.