வானூர் : காதலர் தினத்துக்கு பாஜகவினர் நூதன முறையில் எதிர்ப்பு

744

மயிலம் அருகே வானூர் அடுத்த தென்சிருவலூரில் பாஜகவினர் நூதன முறையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிப்ரவரி 14ஆம் தேதியானது உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காதலர் தினமானது இன்று உலகம் முழுவதும் அனைத்து காதலர்கலாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வானூர் அடுத்த தென்சிருவலூர் கிராமத்தில் அமைந்துள்ள அய்யனாரப்பன் கோவிலில் வானூர் ஒன்றிய பாஜக தலைவர் தங்க சிவகுமார் தலைமையில் நாய்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து வைத்து, காதலர் தினத்திற்கு நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்க்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

You might also like