திண்டிவனத்தில் ஜெ. பிறந்தநாள் | அறுசுவை விருந்தளித்த அமைச்சர் சி வி சண்முகம்

விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழாவை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் மிக சிறப்பாக கொண்டாடினர்.
திண்டிவனம் அடுத்த வடகோடிபாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழாவில் அப்பகுதி அதிமுக தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் இந்த விழாவிற்கு திண்டிவனம் தொகுதி அர்ஜுனன் எம்எல்ஏ அவர்கள் தலைமை தாங்கி ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கீழ் சித்தாமூர் முருகன், கிளை செயலாளர்கள் மோகன், ஜெயமணி, ராஜி மேலும் நிர்வாகிகள் ஜெகன், தட்சிணாமூர்த்தி என பலரும் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளுக்கு அறுசுவை விருந்தளித்த ஜெ பேரவை:
திண்டிவனம் ஜெயலலிதா பேரவை சார்பில் திண்டிவனம் பகுதியில் ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்த நாள் விழா நடந்தது.
இதில் விழுப்புரம் மாவட்ட மற்றும் திண்டிவனம் நகர ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது திண்டிவனம் வண்ணமயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி ரகுமான் தலைமை தாங்கினார். மேலும் அர்ஜுனன் எம்எல்ஏ அவர்கள் முன்னிலை வகித்தார்.
மேலும் திண்டிவனம் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வழக்கறிஞர் ரூபன் ராஜ் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு சிவி சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன் மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், வழக்கறிஞர்கள் திருமுருகன், ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் தளபதி ரவி, மலர் சேகர், ஏழுமலை, திருப்பதியார் சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெயவேல், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் சௌகத் அலிகான், பாசறை கார்த்தி, தினகரன், கார்த்திகேயன், சக்தி பெரியதம்பி, பழனிச்சாமி, தினேஷ் உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு அளித்தனர்.
திரு சி வி சண்முகம் அவர்கள் மாணவர்கள் இனிப்புகளை வழங்கினார்:
திண்டிவனத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான திரு சி வி சண்முகம் அவர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நேற்று காலை விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் அவர்கள் தனது வீட்டின் முன் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் .
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். மாவட்ட ஜெ. , பேரவை செயலாளர் முரளி ரகுராமன், நகர ஜெ. , பேரவை செயலாளர் ரூபன்ராஜ் பங்கேற்றனர்.
மேஉம் உதவியாளர் ராஜாராம், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் சக்தி பெரியதம்பி, சவுகத், பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
இவ்வாறு திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் உணவும் இனிப்பும் வழங்கப்பட்டது.