விழுப்புரம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் | Villupuram Municipality Latest News

412

Villupuram Municipality :

விழுப்புரம் நகராட்சியின் 42 வார்டுகளுக்கான தேர்தலானது நடைபெற்றது. மொத்தமாக 129 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தலானது நடந்தது. 42 வார்டு கவுன்சிலர்களுக்கான பதவிக்கு திமுக, அதிமுக, பாமக என அனைத்து கட்சிகளும் போட்டியிட்டன.

மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் பலர் போட்டியிட்டனர். மொத்தமாக இத்தேர்தலில் 210 வேட்பாளர்கள் 42 பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

விழுப்புரம் நகராட்சியில் 129138 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 41,447 ஆண்களும் 43,085 பெண் வாக்காளர்களும் வாக்களித்தனர். மொத்தமாக 84,532 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தனர். வாக்கு பதிவு சதவீதம் 65.46 ஆக பதிவானது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிகபட்சமாக திமுக 25 இடங்களை கைப்பற்றியது. அதற்கடுத்தது அதிமுக 7 இடங்களையும் பாமக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா இரண்டு இடங்களையும் கைப்பற்றின.

மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்திலும் மேலும் மூன்று இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். திமுக அதிகபட்சமாக 25 இடங்களை கைப்பற்றியதால் விழுப்புரம் நகராட்சி எட்டாவது முறையாக திமுக தன்வசப்படுத்தியுள்ளது.

Villupuram Municipality ஆனது 1-10-1919 ஆம் ஆண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1-10-1953 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் 14-10-1973ம் ஆண்டு முதல் தரமாக தரம் உயர்த்தப்பட்டது.

23- 1-1938 முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நகராட்சி ஆரம்பமான காலத்தில் 36 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உருவாக்கப்பட்டது. 30-11-2011 ஆம் ஆண்டு நகராட்சியை சுற்றியுள்ள சில பகுதிகளையும் சேர்த்து மொத்தமாக 42 வார்டுகளை கொண்ட பெரிய நகராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது.

20வது தேர்தல்:

கடந்த 1972 ஆம் ஆண்டில் விழுப்புரம் நகராட்சியானது தனது முதல் தேர்தலை சந்தித்தது. மொத்தமாக விழுப்புரம் நகராட்சியில் இதுவரை 19 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தற்போது நடந்து முடிந்த தேர்தலானது 20வது தேர்தல் ஆகும். 

நடந்து முடிந்த தேர்தலுடன் திமுகவானது விழுப்புரம் நகராட்சியை எட்டு முறை தன் வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 7 முறையும் நீதிகட்சி மூன்று முறையும் அதிமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

முதல் பெண் நகரமன்றத் தலைவர் :

இந்த நகராட்சியில் இதுவரை அனைத்து நகராட்சி தலைவர் பதவிகளையும் ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர். இந்நிலையில் முதல்முறையாக விழுப்புரம் நகர மன்ற தலைவர் பதவிக்கு பெண்கள் பொது பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 100 ஆண்டுகால விழுப்புரம் நகராட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் நகரமன்றத் தலைவராக அமர இருக்கிறார்.

விழுப்புரம் நகர மன்றத் தலைவராக 29 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ச்செல்வி பிரபு தேர்வு செய்யப்படலாம் என திமுக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவர் முன்னாள் நகர தலைவர் சக்கரை அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களுக்கும் பதவியேற்கும் நிகழ்ச்சியானது மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர் என பிற பதவிகளுக்கும் உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

அன்றைய தினமே நகராட்சியின் முதல் பெண் நகரமன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த வரலாற்று நிகழ்வு எதிர்பார்த்து மற்ற அரசியல் கட்சியினரும் நகர மக்களும் மிக ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் புதிய நகரமன்ற தலைவருக்கான அறையை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

You might also like