உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிகளை Mailam எம்எல்ஏ வரவேற்றார்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவிகளை Mailam எம்எல்ஏ வரவேற்றார்.
திண்டிவனம் அடுத்த Mailam கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள்கள் லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தனர்.
மகள் லட்சுமி ஐந்தாம் ஆண்டும் சரஸ்வதி இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பை உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக உக்ரைனில் படித்து வந்த மாணவ மாணவிகள் அவரவர்களது நாடுகளுக்கு திரும்ப வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த மாணவ-மாணவிகளை இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் பல முயற்சிகள் செய்து விமானம் மூலமாக பத்திரமாக நாடு திரும்ப உதவி செய்து வருகிறனர்.
இந்நிலையில் மயிலயத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளும் ஹங்கேரி வழியாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். பின்பு அங்கிருந்து நேற்று முன்தினம் சொந்த ஊரான மயிலத்தை வந்தடைந்தனர்.
மயிலத்தை சேர்ந்த பொதுமக்களும் மாணவிகளின் பெற்றோரும் அவர்களது வருகையால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உக்ரைனில் இருந்து திரும்பிய 2 மாணவிகளையும் மயிலம் எம்எல்ஏ சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மேலும் அவருடன் பாமக நிர்வாகிகள் செங்கேணி மற்றும் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.
கோட்டகுப்பம் நகராட்சி தலைவர் போட்டியாளர் -திமுக தலைமை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மறைமுக தேர்தலானது இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தனது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டகுப்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு கோட்டகுப்பம் திமுக நகர செயலாளர் திரு ஜெயமூர்த்தி போட்டியிடுவதாக திமுக தலைமையானது அறிவித்துள்ளது.
திமுக நகர செயலாளர் திரு ஜெயமூர்த்தியின் தரப்பினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
திண்டிவனத்தில் மகளிருக்கு வேலைவாய்ப்பு முகாம் :
திண்டிவனத்தில் ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தின் சார்பில் ஒலக்கூர் பி. டி. ஓ. , அலுவலகத்தில் தனியார் துறையினர் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 16 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில் ஒலக்கூர் வட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பணி ஆணை வழங்கினார்.
ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகி, சீத்தாலட்சுமி, ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தின் விழுப்பும் மாவட்ட திட்ட இயக்குனர் காஞ்சனா, துணை இயக்குனர் கவுதமன் பங்கேற்றனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமானது சிறப்பாக நடைபெற்றது எனவும் இதனால் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் வேலைவாய்ப்பில் கலந்துகொண்ட பொதுமக்கள் கூறினர்.
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை தொடர்ந்து நடத்த வேண்டுமெனவும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்களை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடத்தவேண்டும் எனவும் இதன்மூலம் படித்த பட்டதாரிகளுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட மகளிர் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.