Villupuram – 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

668

20 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் | Villupuram

Villupuram : தமிழகத்தில் அவ்வபோது காவல் துறையில் பணி இடமாற்றம் செய்வது உண்டு. அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 20 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 20 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

கண்டமங்கலம் எஸ். ஐ. , பிரபு வளவனுாருக்கும், அங்கிருந்த அன்பழகன் அரகண்டநல்லுாருக்கும், பெரியதச்சூர் கோபி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், அரகண்டநல்லுார் புனிதவள்ளி பெரியதச்சூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலம் செந்தில்குமார் வெள்ளிமேடுபேட்டைக்கும், பிரம்மதேசம் சின்னசாமி ரோஷணைக்கும், அங்கிருந்த பாக்கியலட்சுமி திண்டிவனத்திற்கும், வெள்ளிமேடுபேட்டை ராஜேஷ் மயிலத்திற்கும், செஞ்சி கலால் ஆனந்தன் மற்றும் வளத்தி குமார் ஆகியோர் செஞ்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, அனந்தபுரம் செந்தாமரைச்செல்வன் திருவெண்ணெய்நல்லுாருக்கும், கஞ்சனுார் ஜெயபாலன் அவலுார்பேட்டைக்கும், கோட்டக்குப்பம் பாலமுருகன் மரக்காணத்திற்கும், ஆரோவில் சுந்தரராஜன் கோட்டக்குப்பத்திற்கும், அங்கிருந்த தேவரத்தினம் விக்கிரவாண்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மரக்காணம் சதீஷ் கஞ்சனுாருக்கும், மரக்காணம் சிவகுருநாதன் திருவெண்ணெய்நல்லுாருக்கும், கெங்கராம்பாளையம் சோதனைசாவடி பாபு வானுாருக்கும், பனையபுரம் சோதனைச்சாவடி ஜான் ஜோசப் அனந்தபுரத்திற்கும், விக்கிரவாண்டி ஞானசேகர் திண்டிவனத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்து எஸ். பி. , ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

 

நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா

Villupuram : விழுப்புரம் மாவட்டம்  விக்கிரவாண்டியில் பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாநடைபெற்றது.

நிலவள வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, புகழேந்தி எம். எல். ஏ. அவர்கள் தலைமை தாங்கினார்.

விழாவில் கூட்டுறவு துணை சார் பதிவாளர் மோகன் வரவேற்றார். தாசில்தார் இளவரசன், தனி தாசில்தார் கணேஷ், வங்கி செயலாளர்கள் நாகராஜன், மோகன்தாஸ், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

vikiravandi latest news

மேலும் பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி. முன்னாள் துணைச் சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், தி. மு. க. , நகர செயலாளர் நைனா முகமது ஆகியோரும் பங்கேற்றனர்.

பாபு ஜீவானந்தம், முரளி, எத்திராசன். பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் அரிகரன், மாணவரணி யுவராஜ், இளைஞரணி கார்த்திக், அசோக், சிவா, ராஜா ஆகிய மாவட்ட துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஊராட்சி தலைவர்கள் சீனுவாசன், விசாலாட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் 169 பேருக்கு 65,11,943 ரூபாய் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது

மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டன.

இலவச கண் பரிசோதனை முகாம்

விழுப்புரம், மயிலம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை, மயிலம் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் சிவகுருநாதன், மேலாண்மை இயக்குனர் ராமமூர்த்தி, செயல் இயக்குனர் அகிலாண்டேஸ்வரி, இயக்குனர் சீனிவாசன், ஆலை உப தலைவர் பாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் லாவண்யா அவர்களின் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.

200க்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமால் பயனடைந்தனர்.

இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் ஏற்பாடு செய்திருந்தார்.

You might also like