Vikravandi யில் நூதன முறையில் ரூ. 3 லட்சம் மோசடி

Vikravandi News | விழுப்புரம் மாவட்டத்தில் நூதன முறையில் அவ்வப்போது மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது அம்மாதிரியான நூதன முறையில் மோசடியானது நடைபெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் Vikravandi தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை நூதன முறையில் ஒருவர் ஏமாற்றியுள்ளார்.
கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் முகநூலில் ஒரு நபருடன் பேசி வந்துள்ளனர். இருவரும் நண்பராக பேசி வந்துள்ளனர்.
அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணில் இருந்து பிரவீன் குமாரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பரிசுப்பொருள் அனுப்பியுள்ளதாக ஒரு தகவலை பதிவு செய்து அனுப்பி உள்ளார். அதனை அடுத்து 14 – 1 – 2022 அன்று வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து பிரவீன் குமாருக்கு போன் வந்துள்ளது.
கொரியர் அலுவலகத்திலிருந்து போன் | Vikravandi News
அதில் தாங்கள் கொரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் உங்களுக்கு பரிசுப்பொருள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் கொரியர் கட்டணம் டெலிவரி கட்டணம் என சில கட்டணங்கள் உள்ளதால் குறிப்பிட்ட பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
பிரவீன் குமாரும் பரிசுப் பொருட்கள் மேலிருந்த ஆசையால் அந்த எண்ணில் கூறப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். மொத்தமாக 2,93,500 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார்.
பிரவீன் குமார் பணத்தை அனுப்பிவிட்டு தொடர்புகொண்டபோது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் பிரவீன் குமாருக்கு எந்த பரிசு பொருளும் அனுப்பவில்லை.
சைபர் கிரைம் போலீசில் புகார்
அப்போதுதான் பிரவீன்குமார் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார். இதுகுறித்து ஏமாற்றப்பட்ட பிரவீன் குமார் மற்றும் அவருடைய பெற்றோர் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப் இன்ஸ்பெக்டர் ரவி சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பரிசுப் பொருட்கள் மேல் ஆசைப்பட்டு அடையாளம் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்புவது தவறு என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
பொதுமக்களும் இதுபோன்று இலவச பொருட்கள் மேல் ஆசை கொண்டு பணத்தை இழந்து விடவேண்டாம் என நம் திண்டிவனம் சார்பாக கூறிக்கொள்கிறோம்.
நம் திண்டிவனம் சார்பாக சிறிய வேண்டுகோள்
மேலும் உங்கள் மொபைல் எண்ணிற்கு லாட்டரி முறையில் 5 லட்சம் 10 லட்சம் 20 லட்சம் விழுந்துள்ளது என பலர் உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை கேட்பார்கள்.
அத்தகைய OTP எண்களை ஒருபோதும் யாரிடமும் சொல்ல கூடாது. அத்தகைய OTP எண்னை பகிர்ந்த உடன் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் சுட்டு விடுவார்கள்.
எனவே இது போன்ற நூதன திருட்டுகளிலிருந்து விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வங்கியோ அல்லது எவ்வித அரசாங்கத் துறையில் இருந்தோ எந்த OTP எண்களையும் அனுப்ப மாட்டார்கள்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு விழிப்புணர்வுடன் இருங்கள்.
இவ்வாறு உங்களுக்கு மற்ற இடங்களிலிருந்து பரிசுப்பொருட்கள் விழுந்துள்ளது அல்லது லாட்டாரியல் இத்தனை லட்சம் விழுந்துள்ளது,
என யாரேனும் உங்களிடம் தொடர்பு கொண்டால் உடனே விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைமில் புகார் தெரிவியுங்கள். அதனைக் கண்டு ஏமாறாதீர்கள்.