Melmalayanur -ல் இத்தனை இலட்சம் காணிக்கையா?

729

 Melmalayanur ல் காணிக்கை என்னும் பணி :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த Melmalayanur ல் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் ஆடி மாதத்தில் நேர்த்திக்கடனாக பக்தர்கள்  உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணுகின்ற பணியானது ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை Melmalayanur திருக்கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் திவாகரன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த காணிக்கை எண்ணுகின்ற பணியானது  நடைபெற்றது.

 Melmalayanur காணிக்கையாக பக்தர்கள் அளித்த காணிக்கைகள் :

இந்த காணிக்கை எண்ணும் பணியின் முடிவில் ரொக்கம் ரூ 88,92,464 மற்றும் 367 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளத்தி போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த காணிக்கை எண்ணும் பணியில் கோலியனூர் செயல்அலுவலர் சூரியநாராயணன், திருவக்கரை செயல்அலுவலர் முருகன், செஞ்சி ஆய்வாளர் சங்கீதா, அவலூர்பேட்டை செயல்அலுவலர்.

Melmalayanur திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, தேவராஜ் பூசாரி, வடிவேல் பூசாரி, திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

வளையசெட்டி குளம் கோவிலில் பிருந்தாவன ஆட்டம் மற்றும் உறியடி திருவிழா :

 

வளையசெட்டி குளம் வேணுகோபால சுவாமி கோவிலில் நடைபெற்ற பிருந்தாவன ஆட்டம் மற்றும் உறியடி திருவிழாவை அமைச்சர் திரு செஞ்சி மஸ்தான் அவர்கள் துவக்கி வைத்தார்.

செஞ்சியை அடுத்த சோ. குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வளையசெட்டி குளம் வேணுகோபால சுவாமி கோவிலில் இரண்டு நாள் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது.

valayaseddikulam thiruvizha

இரண்டாம் நாள் விழாவாக உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், திருத்தாலாட்டு மற்றும் பிருந்தாவன ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெர்றன.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கல் விழாவை துவக்கி வைத்தார். இந்த திருவிழாவில்  இளைஞர்கள் உறியடித்தல் திருவிழாவும் பிருந்தாவன ஆட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றன.

இந்த திருவிழாவில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் விஜயராகவன், ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You might also like