Kooteripattu : வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Kooteripattu : வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திண்டிவனம் வட்டம் மயிலம் அடுத்த Kooteripattu யை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த 27. 8. 22 அன்று வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. மேலும் இவர் தனது அறைக்குச் சென்ற பின் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டுள்ளார்.
உறவினர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் பச்சையப்பன் கதவை திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
பின் அந்த அறையின் உள்ளே இருந்த மின்விசிறியில் தூக்குபோட்ட நிலையில் இறந்தார். உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுஅவரை கீழே இறக்கினர்.
அவர் இறந்திருந்தது தெரிய வந்ததும், அவரது உடலை Kooteripattu -ல் இருந்து உடலுக்குூர் ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலம் ஒன்றியத்தில் மின் தடை:
மயிலம் ஒன்றியத்தில் செண்டூர் மின் நிலையத்திலிருந்து வரும் மெயின் லைனானது அறுந்து மின் தடை ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாயினர்.
கடந்த சில நாட்களாகவே மயிலம் சுற்றுவட்டார பகுதிகளியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு 9: 00 மணியளவில் செண்டூர் மின் நிலையத்திலிருந்து மயிலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வரும் மின்சார மெயின் லைன், செண்டூர் சாலை அருகே அறுந்து விழுந்தது.
எனவே மயிலம் பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மயிலம் முழுதும் இருளில் மூழ்கியது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
அனைவரும் மின் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாயினர்.
மின்வாரிய ஊழியர்கள் செண்டூர் சாலை அருகே அறுந்து விழுந்த மின்சார மெயின் லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
நம் திண்டிவனம் Facbook & Instagram பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.