PMK | பா. ம. க. , வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்

PMK | பா. ம. க. , வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம்
PMK : வன்னிய சமுதாயத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
1987-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாகினர்.
அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதியை இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினமாக PMK வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடைபிடித்து வருகின்றனர்.
அதன் காரணமாக வருகின்ற 17-ந் தேதி தியாகிகள் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த PMK மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம். பி. , கவுரவ தலைவர் ஜி. கே. மணி எம். எல். ஏ.
வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி ஆகியோர் வருகை தருகின்றனர்.
எனவே விழுப்புரம் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நினைவு தினம் குறித்தான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் :
கூட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். பா. ம. க.
மாவட்ட தலைவர் தங்கஜோதி, அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பாலசக்தி சிறப்புரையாற்றினார். இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் புண்ணியகோடி, குமரகுருபரன், மாணவர் சங்க துணை செயலாளர் பாலஆனந்த்
நகர செயலாளர்கள் இளந்திரையன், போஜராஜன், பெருமாள்.
ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், மாவட்ட துணை செயலாளர்கள் பாரிராஜ், வக்கீல் சரவணக்குமார், குழந்தைவேல், சந்தோஷ், மணிகண்டன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தியாகிகள் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம். பி. அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து
பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நம் திண்டிவனம் Facebook மற்றும் Instagram
பக்கங்களை Follow செய்யுங்கள்.
மேலும் நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.