Rettanai Holy Angel பள்ளி மாணவர்கள் சாதனை

Rettanai- Holy Angel பள்ளி மாணவர்கள் சாதனை
Rettanai- Holy Angel : 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பாரதியார் விளையாட்டு தடகளப் போட்டிகள் திண்டிவனம் குறுவட்ட அளவில் 08.09.2022 மற்றும் 09.09.2022 அன்று நடைபெற்றது.
இதில் திண்டிவனம் குறு வட்டத்திற்கு உட்பட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டனர்.
இதில் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து 2022 – 23 ஆண்டிற்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
இதனை அடுத்து பள்ளி தாளாளர் திரு. பழனியப்பன் மற்றும் தலைமையாசிரியர் திருமதி. அகிலா அவர்கள் வெற்றிப் பெற்ற பள்ளி மாணவ மாணவியர் ,
உடற்கல்வி ஆசிரியர் பி. ராகுல் ராஜ், அவர்களையும் அவருக்கு உதவிகரமாக இருந்த மணிவண்ணன், சுந்தர்ராஜன் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோர்க்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் ஆசஆசீர்வாதங்களையும் தெரிவித்தனர்.
விழுப்புரத்தில் 1781 அங்கவாடி மையங்களில் ஊட்டச்சத்து வார விழா
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா 2022 நிகழ்ச்சியயை மாவட்ட ஆட்சியர் மோகன் தொடங்கி வைத்தார்.
நம் திண்டிவனம் Youtube Channel யை Subscribe செய்யுங்கள்.