Gingee | நகை வியாபாரியிடம் ரூ. 1. 02 கோடி மோசடி

3,188

Gingee | நகை வியாபாரியிடம் ரூ. 1. 02 கோடி மோசடி

 

Gingee : செஞ்சியில் நகைகடை வியாபாரியிடம் ரூ. 1. 02 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செஞ்சி காந்தி பஜாா் பகுதியில் நகைக் கடை ஒன்றை நடத்தி வரும் சுரேஷ், விழுப்புரம் மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் சென்ற திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
அதில், செஞ்சி காந்தி பஜாா் பகுதியில் கடந்த 2002-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோந்த காமராஜுக்குச் சொந்தமான கட்டடத்தில் ரூ. 7. 50 லட்சம் முன் பணம் கொடுத்து ரூ. 5 ஆயிரம் வாடகையில் அடகுக் கடை நடத்தி வந்தேன்.

இந்த நிலையில், கட்டடத்தின் உரிமையாளா் கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ. 95 லட்சம் கேட்டாா்.

நம்பிக்கையின் காரணமாக ரூ. 95 லட்சம் கொடுத்தேன். அதன்பிறகு, அந்தப் பணத்தை அவா் திருப்பித் தரவில்லை.

இதனால், அந்தக் கட்டடத்தைவிட்டு நான் வேறு இடத்துக்கு மாறிச் சென்று, நகைக் கடை வைத்து நடத்தி வருகிறேன்.
என்னிடம் பெற்ற ரூ. 95 லட்சம், கடையின் முன்பணம் ரூ. 7. 50 லட்சம் என மொத்தம் ரூ. 1. 02 கோடியை கொடுக்குமாறு காமராஜிடம் பல முறை கேட்டும் திருப்ப வழங்காமல் ஏமாற்றி வருகிறாா்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா். இதுகுறித்து மாவட்ட எஸ். பி. பரிந்துரைப்படி, மாவட்ட குற்றப் பிரிவு போஸீஸாா் காமராஜ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
You might also like