Vanur, Kottakuppam, Collector Inspected : பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு.

100

Vanur, Kottakuppam Collector Inspected : பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு.

வானுார், கோட்டக்குப்பம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் ஆய்வு.வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மையார்பாளையம், கோட்டக்குப்பம் நகராட்சி பகுதி மற்றும் மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட நொச்சிக்குப்பம் மற்றும் கூனிமேடு பகுதிகளில் உள்ள பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

பேரிடர் காலங்களில் 500 பேர் வரை தங்குவதற்கான இடவசதி, மின்விளக்கு, குடிநீர், கழிவறை, பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி, ஜெனரேட்டர் வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வு செய்ததுடன், உணவில் கூடுதலாக காய்கறிகள் சேர்த்து உணவு சமைத்து குழந்தைகளுக்கு வழங்கிட அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நொச்சிக்குப்பத்தில் பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு, அடிப்படை வசதி குறித்து ஆய்வு செய்தார்.

பொம்மையார்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெகதீசன், வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, கோட்டக்குப்பம் நகராட்சி கமிஷனர் புகேந்திரி, மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், வானுார் பி. டி. ஓ. , க்கள் மணிவாசகம், நடராஜன் உடனிருந்தனர்.

You might also like