Construction Perimeter Protect Monument : நினைவு சின்னத்தைக் காக்க சுற்றுச் சுவர் கட்டும் பணி.

163

Construction Perimeter Protect Monument : நினைவு சின்னத்தைக் காக்க சுற்றுச் சுவர் கட்டும் பணி.

செஞ்சி அருகே பிராமி கல்வெட்டு மற்றும் சமண படுக்கைகள் உள்ள நெகனுாரில் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ள அடுக்கு பாறையை பாதுகாக்க தொல்லியல் துறையின் சுற்றுச் சுவர் அமைத்து வருகின்றனர்.

செஞ்சி அடுத்த நெகனுார் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்கு பாறையில் சமண படுக்கையும் 4ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும், பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.

இந்த பகுதியை பாதுாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் அத்துமீறி ஆட்கள் நுழைவதைத் தடுக்க தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் உத்தரவின் பேரில், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவநாதம் மேற்பார்வையில், உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் மேற்பார்வையில் நெகனுார் பட்டி அடுக்கு பாறை நினைவு சின்னம் பகுதியில் கிரில் கம்பிகளுன் கூடிய சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

You might also like