Tindivanam Rain News : திண்டிவனத்தில் 24 மி. மீ. மழை பெய்தது.

201

Tindivanam Rain News : திண்டிவனத்தில் 24 மி. மீ. மழை பெய்தது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 24 மி. மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை மிதமான அளவில் மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.

திண்டிவனம், சாரம், ரோஷணை, ஜக்காம்பேட்டை, சலவாதி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

திண்டிவனம்-24, விழுப்புரம்-15, செம்மேடு-13. 20, அனந்தபுரம்-10. 40, வளவனூா்-8, முண்டியம்பாக்கம் -7. 50, முகையூா்-7, கோலியனூா், நேமூா் தலா 6, கெடாா்-5, கஞ்சனூா், சூரப்பட்டு, வானூா், மரக்காணம் தலா 4, அவலூா்பேட்டை-1 மி. மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 119. 10 மி. மீ. மழையும், சராசரியாக 5. 67 மி. மீ. மழையும் பதிவானது.

You might also like