Tindivanam Car Collision Damaged Vehicles : திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 வாகனங்கள் சேதம்.

Tindivanam Car Collision Damaged Vehicles : திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 வாகனங்கள் சேதம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலையில் இருந்து திண்டிவனம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்பகுதியில் உள்ள கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி, சாலை யோரம் நின்றிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் அந்த 5 வாகனங்களும் சேதமடைந்தன. இதையடுத்து காரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள், விரட்டிச்சென்று அந்த காரை திண்டிவனம்-செஞ்சி பஸ் நிறுத்தத்தில் மடக்கி பிடித்தனர்.
அப்போது காரில் இருந்த 4 பேர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. மேலும், பொது மக்கள், வாகன ஓட்டிகள் திரண்டு வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த 4 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதுடன், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.