Removal Of Horns From 8 Buses : திண்டிவனத்தில் 8 பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றம் பணி நடைபெறுகிறது.

103

Removal Of Horns From 8 Buses : திண்டிவனத்தில் 8 பஸ்களில் இருந்த ஏர்ஹாரன்கள் அகற்றம் பணி நடைபெறுகிறது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொதுமக்களை பாதிக்கும் அதிக ஒலியெழுப்பக்கூடிய ஏர் ஹாரன், கண்கூசும் முகப்பு விளக்குகள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கள் சுந்தர்ராஜன், விஜய், ஆகியோர் திண்டிவனம் பகுதியில் இயங்கும் அரசு, தனியார் பஸ்கள், லாரிகளில் அதிரடி சோதனை செய்தனர்.

இதில் 3 அரசு பஸ்கள், 5 தனியார் பஸ்கள், 2 லாரிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து விதிகளை மீறி ஏர்ஹா ரன்கள், கண்கூசும் முகப்பு விளக்குகள் பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவற்றை அதிகாரிகள் அகற்றினர்.

You might also like