National Level Victory Mallar In Kambam Competition : மல்லர்கம்பம் போட்டியில் தேசிய அளவில் வெற்றி

National Level Victory Mallar In Kambam Competition : மல்லர்கம்பம் போட்டியில் தேசிய அளவில் வெற்றி.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறு மாணவிகள் தேசிய அளவில் நடைபெற்ற மல்லர்கம்பம் போட்டியில் வெண்கலம் வென்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 16 மாநிலங்கள் கலந்து கொண்டன.
அதில் தமிழக அணி மூன்றாம் இடத்தை தட்டி சென்றது. அதில் தமிழக அணி சார்பாக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆறு மாணவிகள் கலந்து கொண்டு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, யாழினி, மதிவதனி, சங்கீதா, பவித்ரா, பூமிகா, பிந்துஸ்ரீ ஆகிய சிங்க பெண்கள் தமிழ்நாடு மகளிர் மல்லர் கம்பம் குழு போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கத்தை வென்று உள்ளனர். இவர்களை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் பழனி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்த வெற்றி குறித்து வெண்கலம் என்ற மாணவி மதிவதனி (10), பூமிகா (8) கூறுகையில், ”தேசிய அளவில் மலர் கம்பம் போட்டி கோவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பாக வெண்கலம் வென்றுள்ளோம்.
இந்த வெற்றிக்காக காலையும் மாலையும் கடும் பயிற்சியில் அனைத்து பெண்மணிகளும் ஈடுபட்டு வந்தோம். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றனர்.