Vakkalar Special Camp Study Of Government : வாக்காளா். சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு.

190

Vakkalar Special Camp Study Of Government : வாக்காளா். சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு.

 

திருவெண்ணெய்நல்லூா், செஞ்சி வட்ட பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் சி. பழனி நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழக தோதல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செஞ்சி வட்டம், மாத்தூா் திருக்கை எம். டி. அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, புலிவந்தி அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் சி. பழனி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

மாநிலத் தோதல் ஆணையத்தின் உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோத்தல், நீக்கம், திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் நவ. 4, 5 தேதிகளில் நடைபெற்றன.

மேலும், நவ. 18, 19 ஆகிய தேதிகளிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் தேவைப்படுவோா் குறிப்பிட்ட நாள்களில் முகாம் நடைபெறும் இடங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா்.

You might also like