People Suffering Without Dus Facility : பஸ் வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள் .

141

People Suffering Without Dus Facility : பஸ் வசதி இன்றி தவிக்கும் பொதுமக்கள்.

விழுப்புரத்தில் இருந்து நல்லாண்பிள்ளை பெற்றாள் வழியாக மேல்மலையனுாருக்கு பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் விடுத்துள்ளனர்.

முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் கிராம பொது மக்கள் சார்பில் அமைச்சர் மஸ்தானிடம் அளித்துள்ள மனு: செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவைச் சேர்ந்த வேலந்தாங்கல், கடலாடி குளம், சே. பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், செத்தவரை, தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விழுப்புரத்திற்கும், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு செல்வதற்கு நேரடி பஸ் வசதி இல்லை.

மாவட்ட தலைநகரான விழுப்புரம் செல்வதற்கும், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் செல்வதற்கும் செஞ்சி சென்று செல்லும் நிலை உள்ளது. அமாவாசையன்று சுற்றுவட்டார கிராமங்ளில் இருந்து செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் செல்வதற்கும் விழுப்புரத்தில் இருந்து கண்டாச்சிபுரம், வேட்டவலம், நல்லாண்பிள்ளை பெற்றாள், வேலந்தாங்கல், ஆத்திப்பட்டு, தாயனுார் வழியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Loading...
You might also like