Applications Are Welcome For Consultant Posts : ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு.

286

Applications Are Welcome For Consultant Posts : ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு.

 

விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த அரசு சேவை மையத்தில், வழக்கு ஆலோசகர் காலிப் பணியிடங்கள் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் பொது இடங்களில், வன்முறையால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்திற்காக, மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தற்போது, வழக்கு ஆலோசகர் (மகளிர் மட்டும்) 2 காலியிடங்கள் உள்ளது. இதற்கு கல்வித்தகுதி, இளங்கலை சமூகப்பணி படித்திருக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர் பான பணியில் ஒரு ஆண்டு முன் அனுபவம் பெற்றி ருக்க வேண்டும்.

இப்பணிக்கான மாத ஊதியம் 15, 000 ஆயிரம் ரூபாய் மட்டும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. இந்த பணியிடங்களுக்கு, தகுதியுள்ள நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாற செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like