Attention Demonstration By Revenue Village Workers : வருவாய் கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.

209

Attention Demonstration By Revenue Village Workers : வருவாய் கிராம ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்.

செஞ்சி வட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் செஞ்சி வட்ட தலைவா் பி. மாா்க் தலைமை வகித்தாா். பொருளா் தங்கராஜ், மாவட்ட இணைச் செயலா் விநாயகமூா்த்தி, செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, வட்ட துணைத் தலைவா் விஜயகுமாரி, விஜயராஜ், சுந்தர்ராஜ், வெங்கடேசன், ருக்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணியின் போது, உயிரிழந்த கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதைநீக்கி பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘டி’ பிரிவில் இணைத்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பிரபு, தோதல் பிரிவு அலுவலா் சரவணன், கிராம நிா்வாக அலுவலா் சிலம்பரசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, சங்கத்தின் வட்டச் செயலா் செல்லமுத்து வரவேற்றாா்.

You might also like