Marakkanam பகுதியில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

Marakkanam : வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த பயிர்களை சென்னை வேளாண்துறை இயக்குனர் அலுவலக துணை இயக்குனர் ஸ்ரீ வித்யா மற்றும் விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிக விளைச்சல் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் நுண்ணீர் பாசனபயன்பாடு, உயிர் உரங் கள், நுண்ணூட்ட கலவைகள் பயன்பாடு குறித்தும் வளக்கி கூறினர்.
பின்னர் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மானிய திட்டங் களில் பயன்பெற பயனாளிகளை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் உணவு தானிய உற்பத்தி இலக் கினை அடைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் ‘வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர், முடிவில் மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.