Collector : கலெக்டர் தலைமையில் ஆலோசனை

179

Collector : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், மஞ்சுனேஸ்வர அய்யனாரப்பன் கோவிலைச் சுற்றியுள்ள, காட்டுப் பகுதியை அரசு சார்பில் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் கலெக்டர் கூறுகையில், ‘கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் உள்ள மஞ்சுனேஸ்வர அய்யனாரப்பன் கோவிலைச் சுற்றி 26. 17 ஏக்கர் பரப்பளவில், முக்கியத்துவம் வாய்ந்த வறண்ட நில பசுமை மாறா காடுகள் உள்ளது.

இக்கோவிலைச் சுற்றியுள்ள காடுகளில், 25க்கும் மேற்பட்ட வகையான மரங்களும், 54க்கும் மேற்பட்ட குறு செடிகள் மற்றும் கொடிகள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை மூலம், இக்காட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இக்கோவில் காட்டினை, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன், ஆலோசனை நடத்தப்பட்டது’ என்றார்.

You might also like