Scholarship : போலீசாரின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

137

Scholarship : விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகள் கல்வி பயிலுவதற்கான உதவி தொகை, எஸ். பி. , வழங்கினார்.

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் போலீசார், அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகள் கல்லுாரி மேற்படிப்பை எவ்வித சிரமமின்றி சுலபமாக பயிலும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் காவலர் சேமநில நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 2022-24ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, விழுப்புரம் எஸ். பி. , அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், எஸ். பி. , தீபக் சிவாச், கல்லுாரி பயிலும் போலீசாரின் பிள்ளைகளான 36 மாணவ, மாணவிகளுக்கும், அமைச்சு பணியாளர்களின் பிள்ளைகளான 14 மாணவ, மாணவிகளுக்கு உட்பட மொத்தம் 50 பேருக்கு 8 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கல்வி உதவித்தொகையாக வழங்கினார்.

You might also like