Fire Department : தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை

121

Fire Department : விழுப்புரம் அடுத்த காணை, பெரும்பாக்கம் கிராமத்தில், விழுப்புரம் தீயணைப்புத் துறை சார்பில், ஏரி நீர் நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நடந்தது. தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர், ஏரி, குளங்களில் மிதவை சாதனங்களுடன், மழை, வெள்ள காலங்களில், பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்த செயல் விளக்கங்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். லைப் ஜாக்கெட், மீட்பு படகு மற்றும் சாதனங்களுடன் தீயணைப்பு துறையினர், அப்பகுதி இளைஞர்கள், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பயற்சியளித்தனர்.

You might also like