Collector : அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்

115

Collector : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின், கட்டட தொழிலாளர் பஞ்சாயத்து நல சங்க துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில், கட்டட தொழிலாளர்கள் அளித்த கோரிக்கை மனு: மத்திய அரசு சார்பில் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து கொண்டு வரப்பட்ட 4 புதிய தொகுப்பு சட்டங்களையும் திரும்பப்பெற்று, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான 18 நல வாரியங்களையும், பிற துறைகளில் இயங்கும் 36 நலவாரியங்களையும் பாதுகாக்கும் அறிக்கையை, அரசு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கும், ஜி. எஸ். டி. யில் ஒரு சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் 3 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் மற்றும் சிமென்ட், மணல், கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்வு, ஜி. எஸ். டி. , வரி உயர்வு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

You might also like