Lawyers : வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு

130

Lawers : புதிய குற்றவியல் சட்டங்களை திருப்ப பெற வலியுறுத்தி திண்டிவனத்தில் வழக்கறிஞர்கள் வரும் 6ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி நேற்று முதல் வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்வதென தீர்மானம் நிறைவேற்றினர்.

தொடர்ந்து, திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று காலை திண்டிவனம் கூடுதல் மாவட்ட முதலாவது நீதிபதி மொகமத் பாரூக்கிடம் மனு கொடுத்தனர்.

You might also like