Transgenders : திருநங்கைகளின் பழுதடைந்த வீடுகளை புனரமைக்க நடவடிக்கை – ஆட்சியா்

123

Transgenders : விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைந்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பழனி மேலும் பேசியது: இந்த குறைகேட்புக் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், தொழில் பயிற்சி மூலம் கைவினைப் பொருள்கள் தயாரிப்புக்கான பயிற்சி வழங்குதல், திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குதல், பல்வேறு துறை சாா்ந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டு, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் திருநங்கைகளின் பழுதடைந்த வீடுகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிதாக தொழில் தொடங்குவதற்கு மாவட்டத் தொழில் மையம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் திருநங்கைகள் கல்வி பயில ஜாதிச் சான்றிதழை மாற்றித் தருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

You might also like