Farmers : விவசாய சங்கத்தினர் தீர்மானம்

109

Farmers : செஞ்சியில், முண்டியம்பாக்கம், செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். பொருளாளர் பரமசிவம் தீர்மானங்களை வாசித்தார்.

துணைத் துலைவர்கள் கிருஷ்ணதாஸ், கலிவரதன், துணைச் செயலாளர்கள் பெருமாள், கங்கை கொண்டான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் உள்ள விவசாயிகள் நிலையான விலை கிடைக்கும் கரும்பு நடவு செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆலை நிர்வாகம் கரும்பு சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு வந்து கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நடப்பு ஆண்டு கரும்பு பருவத்தில் டன் ஒன்றுக்கு 5, 000 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு விதைகளை கரணைகளாக இரண்டு பருவத்திற்கும் தரவேண்டும். மறுதாம்பு விடும் கரும்பு விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்.

You might also like