PMK : திண்டிவனம் தொகுதிக்கு பா. ம. க., வினரிடமிருந்து விருப்ப மனு

218

PMK : திண்டிவனம் மன்னார்சாமி கோவில், சக்கரபாணி திருமண நிலையத்தில், பா. ம. க. , சார்பில், திண்டிவனம் சட்டசபை தொகுதியின் செயலாளர் மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கான விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தர்மபுரிசண்முகம், வன்னியர் சங்க மாநில செயலாளர் அய்யாசாமி, சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மாநில சமூக ஊடக பேரவை செயலாளர் முகுந்தன், சமூக நீதி வழக்கறிஞர் பேரவை மாநில செயலாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் பாவாடைராயன், மாவட்ட துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ், வன்னியர் சங்க செயலாளர் சம்பத், பொருளாளர் கவிதா, திண்டிவனம் நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் ஒரு ஆண், ஒரு பெண் என தனித்தனியாக செயலாளர், தலைவர் பதவிக்கு கட்சியினர் விருப்ப மனு கொடுத்தனர்.

You might also like