Vinayagar Chathurthi : விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதை – செஞ்சியில் எஸ். பி. , ஆய்வு

109

Vinayagar Chathurthi : செஞ்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இந்து முன்னணி மற்றும் பொது மக்கள் சார்பில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

இதில் பெரும் பகுதி அந்தந்த இடங்களில் ஏரி குளங்களில் கரைத்து விடுகின்றனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்படும் சிலைகளை 5ம் நாள் செஞ்சி சத்திரத்தெருவில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மரக்காணம் கடலில் கரைக்கப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று மாலை எஸ். பி. , தீபக் சிவாச் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ள இடங்கள் மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம், இந்து முன்னணி சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். செஞ்சி டி. எஸ். பி. , செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, அப்பண்டைராஜ், உடன் இருந்தனர். ஆய்வின் போது எங்கெங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Loading...
You might also like