Minister Masthan : திமுக சார்பில் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மஸ்தான்

116

Minister Masthan : மயிலம் சட்டசபை தொகுதியில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் திறப்பு விழா கூட்டேரிப்பட்டில் இன்று(செப்.11) நடந்தது. விழாவிற்கு, தி. மு. க. , மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கி பேசினார். இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், உதயகுமார், பாபு முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் மஸ்தான் சிறப்புரையாற்றினார்.

மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் எம். எல். ஏ. , க்கள் சேதுநாதன், மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் மணிமாறன், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சாரி, ஒன்றிய கவுன்சிலர்கள் பரிதா சம்சுதீன், நிவேதா ஜெய்சங்கர் உட்பட பங்கேற்றனர். ஏற்பாடுகளை மயிலம் சட்டசபை தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் விஜயகுமார், அண்ணாமலை செய்திருந்தனர்.

You might also like