Mailam : நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்

121

Mailam : மயிலம் தமிழ்க் கல்லுாரியில் நடந்த நான் முதல்வன் திட்ட உயர்வுக்கு படி சிறப்பு முகாமை அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், கவுன்சிலர் செல்வகுமார், ஊராட்சி தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் பொறுப்பு சிவசுப்ரமணியம், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழக இயக்குனர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, தாசில்தார் சிவா வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியை பேராசிரியர் வள்ளி தொகுத்து வழங்கினார்.

முகாமில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 78 பேரில் 7 பேருக்கு மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு ஆணை வழங்கப்பட்டது. மற்ற 71 பேருக்கு பிற கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளில் சேர்வதற்கான ஆணைகள் இன்று(செப்.26) வழங்கப்பட்டது.

You might also like