Villupuram Collector : அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்

148

Villupuram Collector :விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (அக் 2ம் தேதி) காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடக்கிறது.

ஆட்சியர் பழனி செய்திக்குறிப்பு: அனைத்து ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினத்தில் ஊராட்சி தலைவர்களால் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல். 2023-24ம் ஆண்டிற்கான கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. துாய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். எனவே, பொதுமக்கள் அனைவரும், நாளை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading...
You might also like