Mailam: மயிலம் சாா் – பதிவாளா் அலுவலகத்தில் திடீா் ரெய்டு

55

Mailam: மயிலம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் பத்திரப்பதிவின்போது லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்அடிப்படையில் இந்த பிரிவின் டி.எஸ்.பி. அழகேசன், காவல் ஆய்வாளர் என்.ஈசுவரி, உதவி ஆய்வாளர் சக்கரபாணி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர், மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வியாழக்கிழமை மாலை 6.20 மணிக்கு நுழைந்தனர். உடனடியாக அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் யாரும் வெளியே செல்லாதவகையில் அமர வைக்கப்பட்டனர். வியாழக்கிழமை மயிலம் சார் – பதிவாளர் அலுவலகத்தில் பதிவான பத்திரங்கள், அதன் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.

மேலும் அலுவலக ஊழியர்கள், சார் – பதிவாளர் வெங்கடேசுவரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 8.15 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1.20 லட்சத்தை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றி இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

You might also like