Gingee: செஞ்சியில் ஊட்டச்சத்து தொகுப்பு – எம்.எல்.ஏ வழங்கல்

Gingee: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில் குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 6 மாதத்திற்கும் குறைவான வயதுடைய 159 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த குழந்தைகளின் தாய்மார்களுக்கு அரசு சார்பில் நெய், புரோட்டின் பவுடர், பேரீட்சம்பழம், இரும்பு சத்து சிரப்பு, டவல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கி பேசினார்.
பி.டி.ஓ.க்கள் சீத்தாலட்சுமி, முல்லை. ஏ.பி.டி.ஓ.க்கள் பழனி, குமார், கந்தசாமி, ஊராட்சி தலைவர்கள் சங்கத் தலைவர் ரவி மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.