Tindivanam: ரயில் நிலையத்திலுள்ள ஆர்.எம்.எஸ் அலுவலகத்தை மூடுவதற்கு திட்டம்

70

Tindivanam: திண்டிவனத்திலுள்ள ரயில் நிலைய வளாகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த RMS (ரயில்வே மெயில் சர்வீஸ்) செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தை நிரந்தரமாக மூடிவிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் செயல்படும் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துடன் மெர்ஜர் செய்யப்பட உள்ளது.

இதற்கான அரசாணை கடந்த 17.10.24ல் தபால் துறையின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் டிச., 7ம் தேதி முறைப்படி திண்டிவனத்திலுள்ள அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்தப்படும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். திண்டிவனத்திலுள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மாலை 4.15 மணியிலிருந்து இரவு 11.45 மணி வரை செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் தபால்களை வாங்குவது, பதிவு தபால்கள் மற்றும் ஸ்பீடு போஸ்ட் ஆகிய சேவைகள் நடக்கின்றன.

திண்டிவனம் பகுதிகளிலுள்ள மற்ற தபால் நிலையங்கள் மாலை வரை செயல்படுகின்றன. மாலை நேரத்தில் மட்டும் ஆர்.எஸ்.எம். அலுவலகம் செயல்படுகின்றது. தனியார் கூரியர் சேவை மற்றும் ஸ்பீடு போஸ்ட் கட்டணத்தை விட ஆர்.எம்.எஸ்.இல் கட்டணம் குறைவாக இருப்பதால், வழக்கறிஞர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் ஆர்.எம்.எஸ். அலுவலகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 22ம் ஆண்டு திண்டிவனம் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தை மூடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, கடும் எதிர்ப்பு காரணமாக மூடுவிழா தள்ளி வைக்கப்பட்டது.

You might also like