Kabadi: மாநில அளவிலான கபடி போட்டி; அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

157

Kabadi: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்காக 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. அதில் எடப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கபடி போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். எடப்பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதாஸ், கோகுல்ராஜன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

You might also like