Villupuram: விழுப்புரம் வெள்ளம்: கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்… ஒரு ஹெக்டேருக்கான தொகை எவ்வளவு தெரியுமா..?

Villupuram: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இதுவரை கண்டிராத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பல பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளின் விளைநிலங்கள் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் தாக்கத்தால், கடந்த 30-ம் தேதி தொடங்கி இரு தினங்கள் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. வரலாறு காணாத வகையில், மாவட்டம் முழுவதும் 65.5 சென்டி மீட்டர் மழையளவு பதிவானது. இதனால், மாவட்டம் முழுவதும் ஆறுகள், நீர்வரத்து வாய்க்கால்களில் வெள்ளநீர் பாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் சூறைக்காற்று கனமழை பாதிப்பில் கூரைகள் பெயர்ந்தும், சுவர்கள் இடிந்து விழுந்தும் வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டது.