villupuram: விழுப்புரத்தில் அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

villupuram: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சி. பழனி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுந்தரசேகரன் பேசியது: டிசம்பர் 11, 12-ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்அடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழையை எதிர்கொள்ளும் விதமாக, அனைத்துப் பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும். பலத்த மழை அதிகமிருந்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், காவல், தீயணைப்புத் துறையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைக் குழுவினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மரக்காணம், வானூர் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.